Followers



விழுங்கும் தருணங்கள்

தீபச்செல்வன்

முடிவற்ற உரையாடலையும் தன்னை விழுங்கும் தருணங்களையும் முரண்பாடுக ளையும் ஏமாற்றங்களையும் கலைமகளின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. தனக்கான உலகத்தை, தனக்கான சொற்களை, பொழு துகளை இன்னும் பிறவற்றைக் கோரிநிற்கின் றன கலைமகளின் கவிதைகள்.
தனது நினைவுகள் அனுபவங்களைக் கவிதைகளாக வெளிப்படுத்தும் கலைமகள் தனது காத்திருப்பையும் காதலின் நெருக்கத் தையும் மிக உன்னதமாகக் கருதுகிறார். எந்த முரண்பாடுகளிலும் பிரிவுகளிலும் காதல் அல்லது நெருக்கம் குடியிருப்பதை வெளிப்படுத்துகிறார். அது எப்படி சுருங்குகி றது எனவும் பெருகுகிறது எனவும் பேசுகி றார். அன்புக்காக அழைக்கிற மனமும் சொற் களும் அவரை முழுமையாக இங்கு பிரக டனம் செய்து விடுகிறது.

உனக்கும் எனக்கும்
ஒத்துவராத சில
பக்கங்கள் நடுவே இன்னும்
அமர்ந்திருக்கிறது நம் காதல்

என்ற இந்தக் கவிதையின் கூறுதல் முறை மையையும் அதன் அர்த்தத்தையும் நோக்கு கின்றபோது, அது பல கவிஞர்களின் கவிதை களை நினைவுபடுத்துவதாகத் தன்னை வெளிப்படுத்துகிறது எனலாம். ஆனால் தன்னை உன்னதமாக்குகிற

பாரதியின்
கவிதையை விட
கண்ணம்மாவின்
கண்ணீர் ஆழமானது

என்பதன் வாயிலாக பெண்ணினது இயக்க சக்தியையும் ஆளுமையையும் அன்பையும் எடுத்துக் காட்டி உன்னதப்படுத்துகிறார். வாழ்வை மிக உன்னதப்படுத்துகிற மனதை கலைமகளின் காதல் சார்ந்த கவிதைகளில் காணமுடிகிறது. தன்னை விழுங்குகிற தரு ணங்களாகக் கருதினாலும் தொடருவதற்கு தேடி அடைவதற்கு பிரயாசப்படுகிறது.

தொடரும் ......
என்னும் வார்த்தையை உன்
ஒவ்வொரு வரிகளிலும்
தேடித்தோற்றேன்

இந்தத் தோல்வியும் ஏமாற்றமுமே பின்னர் வரும் கவிதைகளையயல்லாம் தூண்டி விடு கின்றன. அதுவே வாழ்வாகவும் தொடருகின் றது.

உன்னை நான்
நேசித்த பொழுதுகளை
அறியமாட்டாய்
வெறுத்த பொழுதுகளையே
நீ அறிவாய்

என்று இப்படிச் சொல்லுகிற கவிதையைத் தொடர்ந்து வருகிற மற்றைய கவிதையில்

.....உடல் ரீதியாய்
உணர்வு ரீதியாய்
நான் வித்தியாசமானவள்
உன்னில் இருந்தும்
அவர்களில் இருந்தும் என்று இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான கவிதைகளாக மமநான்டுடு என்றமைந்த தன் னைக் குறித்து எழுதும் பிரகடனங்களை அல்லது மனவெளிச் சொற்களைக் குறிப்பிட லாம். கலைமகளும் அவற்றை இங்கு முக்கி யப்படுத்துகிறார். உன் முன் மண்டியிட விரும் பவில்லை என்னும் பொருள் சார்ந்தமைகிற வரிகள் ஏற்கனவே பல கவிஞர்களின் கவி தைகளில் பார்த்திருக்கிறோம். மநான்டு என்ற தலைப்பிலமைந்த கவிதை தன்னைக் குறித்த பாடலாக இருக்கின்றது. அவை கன வுகள் ஏமாற்றங்கள் முயற்சிகள் குறித்துப் பேசுகின்றன.

இந்த முயற்சிகள், ஒரு கட்டத்தில் குருதி சிந்துகிற தருணங்களுக்குக் கொண்டு செல் லுகிறது. மகுருதி சொட்டும் கண்ணீர்டு, மமுடி வில்லாத பேச்சுக்கள்டு முதலிய கவிதைகள் இவ்விதம் அமைகின்றன. மமுடிவில்லாத பேச்சுக்கள்டு என்ற கவிதை முழுத் துயர்க ளின் வலியாக வருகிறது.

உங்கள் முன்
மேடையேறும் எங்கள் கால்கள்
வெந்துபோகிறது ஆனால்
எல்லாவற்றையும்
பேசித்தீர்த்துக் கொள்வதற்காய்
மீண்டும் மீண்டும்
மேடை யேறுகின்றது

இந்த முரண்பாடுகளுக்குள் பிறந்துவிடு கிற குழந்தை குறித்த தாய்மையின் ஏக்கங்க ளாக சில கவிதைகள் வருகின்றன. இந்தக் குழந்தை துயர்கொள்ளுகிறது, அழுகிறது, திசையற்றுக் கிடக்கிறது, யாருக்கு உரியது என்ற கேள்விகளால் தனித்திருக்கிறது. இவ் வாறு தனித்திருக்கும் குழந்தைக்கான தாய் மையின் ஏக்கத்தை கலைமகளின் இந்த வரி கள் உணர்த்துகின்றன.

....அவன் விந்துவில் தான்- நீ
பிறந்ததாய் கூற
விட்டு வந்தேன்
பால் சுரக்கையில்
புரிகிறது

மவாழ்தல்டு என்ற கவிதைதான் இந்தத் தொகு தியில் என்னை அதிகம் பாதித்த கவிதை. பயங்கரமான உலகத்தில் பிறந்து விடுகிற பெண் குழந்தையின் ஏக்கத்தை வாழ்தல் - 01 கவிதை பேசுகிறது.

மஇரு முலைகளுடன் பிறந்து விட்டாய்......
நான்
எப்படிச் சொல்வேன்
இந்த உலகம் பயங்கரமானது என்பதை
முன்னம் ஒரு பொழுது
என் தாய் காத்தது போல்
பின்னைய பொழுதுகளில்டு

இந்தப் பயங்கர உலகத்தில் தனது குழந் தையை எப்படிக் காத்துக்கொள்ளுவது என்ற ஏக்கமே இந்தக் கவிதை.

மபருந்துகள் வட்டமிடும்
காலங்கள் இவை
அடைகாத்து
சோர்ந்து போய் அமர்ந்திருக்கும்
நான் எப்படிச் செல்வேன்
இந்த உலகம் பயங்கரமானது என்பதைடு

குழந்தையின் முழு இருப்பையும் கவிதை மனம் கேள்விக்குள்ளாக்கிறது. மவாழ்தல் - 02டு கவிதை உயிரழிவைப் பற்றியும் அச்ச மும் அவலமும் நிறைந்த காலம் பற்றியும் பேசுகிறது. அதிகாரத்தால் பலி கொள்ளப்படு கிற வாழ்வு குறித்தும் பேசுகிறது. ஆயுத வழிப் போரின் அவலத்தைக் கவிதை இப்படி சொல் லுகிறது.

வன்முறை வளர ஆயுதம் வளரும்
ஆயுதம் வளர போர் வளரும்
போர் வளர கோன் வளர்வான்
கோன் வளர குடி வீழும்

உலகப் பொதுவான இன்றைய வாழ்வியல் அரசியலைக் குறிப்பிட்ட வரிகள் உள்ளடக்கி யிருக்கின்றன. வாழ்தல் - 03, 04 கவிதை கள் நான் வாழ்வேன் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.

நான் வாழ்வேன்
கனவுகளிலும் கசக்கி எறிந்த காகிதங்களிலும்
உதிர்ந்து கிடக்கும் மலர்களிலும்
இலையுதிர்கால வேனில் பொழுதுகளிலும்

முடிவில்லாப் பேச்சுக்கள் என்ற இத்தொகுப் பின் வாயிலாக தனது கனவுகளையும் எண் ணங்களையும் ஏக்கங்களையும் பகிரத் தொடங்கியிருக்கும் கலைமகளிடமிருந்து இன்னும் பல சிறந்த கவிதைகள் கிடைக்கு மென நம்பிக்கை கொள்ளலாம்.

மாவை வரோதயன்

(1965 - 2009)

சத்தியகுமாரன் என்னும் இயற்பெயரைக் கொண்ட மாவை வரோத யன் யாழ்ப்பாணத்தின் வடக்கேயுள்ள மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலும் பின்னர் இலங்கை சுகாதார சேவையில் சுகாதாரப் பரிசோதகராகவும் பணியாற்றி யுள்ளார்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் என பன்முகத் தளத்தில் செயற்பட்டவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக் கியக் குழுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வானொலி நிகழ்ச்சி களிலும் பங்குபற்றியுள்ளார்.

இன்னமும் வாழ்வேன் (கவிதை), வேப்பமரம் (சிறுகதை) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. தாயகம் சஞ்சிகையில் வலிகாமம் மைந் தர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடரும் எழுதியிருக்கிறார்.

சி.மணி

(1936 - 2009)

தமிழின் புதுக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்கவரான சி.மணி மஎழுத்துடு இதழ் வெளிவந்த காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்களில் ஒருவர். கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தில் தீவிரமாக இயங்கியுள்ளார். இவர் ஆங்கிலப் பேராசிரியருமாவார். வரும் போகும், ஒளிச்சேர்க்கை, மஇதுவரைடு ஆகிய கவிதை நூல்களும் மயாப்பும் கவிதையும்டு என்னும் விமர்சன நூலும் வெளிவந்துள்ளன. எலியட்டின் மபாழ்நிலத்டுதையும் மொழியாக்கம் செய்துள்ளார்.

விளக்கு, இலக்கியப் பரிசு(2002), தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது (1983,1985) என்பவற்றை யும் பெற்றிருக்கிறார். வே.மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கும் சி.மணியின் இயற்பெயர் எஸ். பழனிசாமி.

கடிதங்கள்

கவிதைக்கான காலாண்டு இதழாக மொட்டவிழ்ந்த மறுபாதியே நீ கவி தைக்கானவன் என்றாலும் உன்னுள் ஓடும் கட்டுரை நாடிகளும் என்னைக் கவர்ந்தவை. அதிலும் புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம் என்ற வெள்ளைமாரனார் கட்டுரை மேலும் சிறப்பானது. புனித மான எமது நெறியில் களையோடி உள்ள இவை போன்றகளைப் பயிர் களை அறிஞர்கள் தெளிவித்து புலப்படுத்துவது எமது நெறிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் மறுபாதி டஉன் நிறை உன் விலையை விட அதிகம். இது உன்னை முத்தமிட்டவருக்கு புரியும். மறுபாதியே உன் ஒவ் வொரு பாதியையும் தவறாது தவழவிடுவாயாக. அடுத்தவனை எதிர் பார்த்து.....

ஜீவா
புலோலி தென்மேற்கு


கலை உலகில் ஏற்பட்டு வரும் மாறுதல்களின் ஆரோக்கிய மான பகைப் புலத்தில் கவி தைக்கான தனித்துவமான சஞ் சிகைகளின் வருகை முதன்மை பெறுகின்றது. இவ்வகையில் நடுகையினைத் தொடர்ந்து கலை உலகில் வெளிக்கிளம்பிய மறுபாதிஎனும் கவிதைக்கான இதழின் வருகை மகிழ்ச்சிக் குரியதாக உள்ளது.
வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது. அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று பேச்சளவில் மட்டும் மார்தட்டிக் கொண்டிருப்ப வர்கள் மத்தியில் செயல்நிலை செயற்பாட்டுடன் இயங்குகின்ற கலைஞர்களின் உற்பத்தியாக இவ்விதழின் வெளிப்பாடு அமை கின்றது.
இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்த கவிதைகள், கட்டுரைகள், ஆரோக்கியமானவையாக அமைகின்றன. எனவே இவ்விதழின் தொடர்ச்சியான வருகை வாசிப்பியல் சார்ந்தும் எழுத்தி யல் சார்ந்தும் மாறுதல்களை ஏற்படுத்தும்.

எஸ்.ரி. அருள்
மல்லாகம்.



அடுத்த மறுபாதிக்காகக் காத்திருக்கிறேன். சமய உணர்வுகளைப் புண்படுத்தாததாயும் காத்திரமானதாயும் அடுத்த இதழ் மலரட்டும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

தி. மயூரகிரி
நீர்வேலி
.

About Me

ஆசிரியர் -சித்தாந்தன், இணையாசிரியர்கள் -சி.ரமேஷ், மருதம் கேதீஸ்