Followers



அச்சம்

கருணை ரவி

எனது இரவுகளில்

செட்டை கழற்றிய சாரையயான்று

சிநேகம் கொள்கிறது

அலகுகளால் கன்னங்களைத் தேய்ப்பது

நாக்கினால் வியர்வையை ஒற்றுவது

வாலைச் சுருட்டி

வளையமாய் கழுத்தில் எறிந்து

மடியை முகருவது

இரவுகள்

அச்சத்தைத் தருகின்றன

நாகங்களுடன் ஸ்பரிசம் கொள்வதாயும்

பற்களில் விசங்கள் இருப்பதாயும்

சாரைகள் தீண்டி

மனிதர்கள் செத்ததாய் எவரும் சொல்வதில்லை

சாரைகள் புணரும் வேளை

போர்த்தெடுக்கும் வெள்ளைச் சேலையில்

அதிர்ஸ்ட தேவதைகளின் சிரிப்பொலிகள் நிறையும்

மலடிக்கும் கருத்தரிக்கும் என

பாட்டி சொல்வாள்

ஒற்றைப் பாம்பு

என்னுடனேன் சிநேகம் கொள்கிறது...

என்னைப் புணர்வதற்கோ?


0 comments to “ அச்சம் ”

Post a Comment

About Me

ஆசிரியர் -சித்தாந்தன், இணையாசிரியர்கள் -சி.ரமேஷ், மருதம் கேதீஸ்